மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை
#Dshorts: மத்திய அமைச்சரும் லோக் ஜான்ஷக்தி கட்சியின் மூத்த தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் நேற்று ( சனிக்கிழமை இதய அறுவை சிகிச்சை செய்பட்டுள்ளதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகவும் பிரபலமான தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வான் (74) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகன் சிராக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த சில நாட்களாக அப்பா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் .நேற்று மாலையில் அவர் உடல்நிலையில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தின் காரணமாக நேற்று இரவு உடனடியாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .தேவை ஏற்பட்டால், சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்,என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார் .
पिछले कई दिनो से पापा का अस्पताल में इलाज चल रहा है।कल शाम अचानक उत्पन हुई परिस्थितियों की वजह से देर रात उनके दिल का ऑपरेशन करना पड़ा।ज़रूरत पड़ने पर सम्भवतः कुछ हफ़्तों बाद एक और ऑपरेशन करना पड़े।संकट की इस घड़ी में मेरे और मेरे परिवार के साथ खड़े होने के लिए आप सभी का धन्यवाद।
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 3, 2020