சிறப்பான கொரோனா சிகிச்சை : உத்திர பிரதேச முதல்வரை பாராட்டிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
உத்தரபிரதேச மாநிலத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் யோகி ஆதித்யநாத் அரசை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் லக்னோவில் உள்ள புதிய கொரோனா மருத்துவமனையை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
இதன் பின்பதாக பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ஒருவரை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சில தவறுகள் நடப்பது இயல்பு எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதை குறை கூறிக் கொண்டிருக்காமல் சூழலுக்கு ஏற்றவாறு குறைகளை கண்டறிந்து, மாநில அரசுக்கு தெரிவிப்பது மிகவும் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகள் தாராளமாக உதவி வருவதாகவும், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கு பிரதமர் மோடி எடுத்த முயற்சி தான் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது எனவும், இவர்களது இந்த செயலை உலக சுகாதார நிறுவனமே பாராட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.