நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்.! மத்திய அமைச்சர் விளக்கம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி..! 

Minister Rajnath singh - Lok Sabha Winter session 2023

நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.!

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்பட்டது. அதே போல இன்று கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது . பழைய நாடாளுமன்றத்தில் இதுபோல நடைபெற்றது இல்லை. இதற்கு  பிரதமர் மோடி பொறுப்பேற்க  வேண்டும்

பாதுகாப்பு குறைபாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். என கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அதில், நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்டும் . பாதுகாப்பு உறுதி செய்யப்படும். என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற முழு பாதுகாப்புக்கும் பொறுப்பு நான் தான். இது தொடர்பாக நான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக இத்வரை 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் மக்களவை மதியம் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்குள் உள்ளே குதித்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா. பாராளுமன்றத்திற்கு வெளியே  கோஷமிட்டவர்கள் ஹரியானா, ஜிந்தூரை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த வேலையில்லா பட்டதாரி அமோல். இவர்கள் கோஷம் போடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்  லலித்.  இவர்கள் அனைவருக்கும் டெல்லி குருகிராமில் தங்க இடம் அளித்தது விஷால் சர்மா எனும் ஆட்டோ ஓட்டுநர் என அனைவரும் கண்டறியப்பட்டனர். இதில் லலித் தவிர அனைவரும் கைது செய்ப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். லலித்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்