9 நாட்களாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை வீணடித்து விட்டனர்.! விவாதிக்க அரசு தயார்.! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு.!
2 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் அவை துவங்கியதும், எதிர்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை அவைத்தலைவராகவும் இருக்கும் பியூஷ் கோயல் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசுகையில் எதிர்க்கட்சிகள் அமளி குறித்து விமர்சித்தார். ‘
மேலும் அவர் கூறுகையில், மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்கள் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் நாடளுமன்றத்தை தொடர்ந்து 9 முக்கிய நாட்களாக வீணடித்து விட்டனர்.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்த மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தனர்.
இதற்காக மணிப்பூர் களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாள் பயணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.