மணிப்பூரில் ரூ .3,000 கோடி நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!
மணிப்பூரில் ரூ .3,000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மணிப்பூரில் ரூ .3,000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், மாநிலத்தில் விரைவில் ரூ .16,023 கோடி மதிப்புள்ள கூடுதல் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற கருத்தை முன் வைத்தார்.
இந்த விழாவில் வடகிழக்கு பகுதியில் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி கே சிங், மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மற்றும் மணிப்பூர் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர் கூறுகையில், இது நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்க முடியும். அதன் வளர்ச்சிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நல்ல நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை அமைப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்துள்ளார் என்றார். திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தல் மற்றும் பயன்பாட்டு மாற்றத்தை விரைவுபடுத்தவும் கட்கரி மாநிலத்தை வலியுறுத்தினார்.
874.5 கி.மீ. நெடுஞ்சாலை பணிகளுக்கு விரைவில் ரூ .16,023 கோடி மதிப்புள்ள திட்டங்கள் வழங்கப்படும். ரூ .2,250 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஏற்கனவே மாநிலத்தில் நடந்து வருகின்றன நிலையில் அவை விரைவுபடுத்தப்படும்என்று கட்கரி கூறினார்.