பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.! நிர்மலா சீதாராமன் உரை.!
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் சுமார் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக அவரவரது வங்கி கணக்கில் விவசாய உதவித்தொகையானது வழங்கப்பட்டுள்ளது. – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தில். நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அதன் முன்னுரையாக, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துரைத்து வருகிறார். அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் சுமார் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக அவரவரது வங்கி கணக்கில் விவசாய உதவித்தொகையானது வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், 9.6 கோடி பயனாளர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எனவும், 44. 6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டு பேசி வருகிறார்.