மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட்.! நிர்மலா சீதாராமன் இன்று முதல் தீவிர ஆலோசனை.!
வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை.
தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வரும் 2023 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் தான் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதன் பிறகு 2024 தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக இன்று முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முதல் நாளில் இன்று தொழிற்துறை அமைப்பான CII கலந்து கொண்டு முக்கிய கோரிகளைகளை வைத்துள்ளது. தனிநபர் வருமான வரியைக் குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியை குற்றமற்றதாக்குதல் மற்றும் மூலதன ஆதாய வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்துள்ளனர்.
இதில், ஒருவர் தனது வர்த்தகத்தில் செய்த குற்றச் செயல்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத வரையில், சிவில் வழக்குகளில் கைது செய்வதோ அல்லது காவலில் வைக்கப்படுவதோ கூடாது என்றும் CII அமைப்பின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் இந்த அறிக்கையில் நிதியமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இன்றைய ஆலோசனையை அடுத்து, வரும் நவம்பர் 22ஆம் தேதி விவசாயம், அக்ரோ பிராசசிங் துறை சார்ந்து நிதியியல் மற்றும் முதலீட்டு சந்தை நிபுணர்களுடன் ஆலோசனை, அடுத்து நவம்பர் 24ஆம் தேதி சுகாதாரம், கல்வி, தண்ணீர் மற்றும் துப்புரவு ஆகிய துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை, அதனை அடுத்து நவம்பர் 28ஆம் தேதி வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களைச் சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.