கம்ப ராமாயணத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், “தசரதன் புதல்வர் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்; புயல் இவன் மேனி என்பார்; பூவையும் பொருவும் என்பார்; மயல் உடைத்து உலகம் என்பார்; மானுடன் அல்லன் என்பார்; கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்.” தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார் என்று பதிவிட்டுள்ளார்.
தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.நாளை #ராமர்கோயில் அடிக்கல் நாட்டு விழா.@PMOIndia பங்கேற்பு#கம்பராமாயணம் @ShriRamTeerth pic.twitter.com/clvgpKLMFk
— Nirmala Sitharaman (@nsitharaman) August 4, 2020