புதுச்சேரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.?
Nirmala Sitharaman : மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் வேளைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களவை தொகுதியை மட்டும் கொண்டுள்ளது. இதில், மாநிலத்தில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிட போவதியிலை என அக்கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி முன்னரே அறிவித்து விட்டார். என்ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணியில் பாஜக இருக்கிறது.
Read More – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!
இதனால் புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் ஆதரவுடன் பாஜக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாயாகியுள்ளது. இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரான நிர்மல் குமார் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More – ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாஜக தரப்பில் இருந்து 3 பேர் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. அகில் குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் முன்வரிசையில் இருப்பதாகவும், அவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்து புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் பெயரும் அதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டவுடன் பாஜக தலைமை 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.