அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது.! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.!

Default Image

அதானி குழுமம் கடன் விவரங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணாமாக மக்களவை மதியம் 2மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழுத்துபூர்வ பதில் : 

இந்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி நிறுவன கடன் விவரங்கள் குறித்தும் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

ஆர்பிஐ விதிமுறை :

அதில், ஆர்பிஐ சட்ட விதிப்படி, எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது. 1934 சட்ட விதிகளின்படி, பொது நிறுவனத்தின் கடன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது. நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குறிப்பிட்ட வங்கியானது, கடன் விவரங்களை ஆர்பிஐக்கு தெரிவித்துவிடும். அப்படி அளிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுக்கப்பாக வைத்து இறுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்ஐசி கடன் :

மேலும், எல்ஐசி , அதானி நிறுவனத்திற்கு வழங்கிய கடனானது டிசம்பர் 31 வரையில் 6,347 கோடியாகும். அது தற்போது,  6,182 கோடியாக குறைந்துள்ளது எனவும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி குழுமம் கடன் விவரங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்