மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல்!

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 40 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில், விஜயன் பவனில் வைத்து உரையாடல் நடை பெற்றுள்ளது. அதில் உணவு, நுகர்வோர், விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத் துறை, ரயில்வே வர்த்தக அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாடி உள்ளனர்.
இந்நிலையில், நான்காவது நாளாக நடைபெறக்கூடிய இந்த உரையாடலில் வெளிப்படையான சில கருத்துக்களும் பேசப்பட்டுள்ளது. விவசாயிகள் எது குறித்தும் அஞ்ச வேண்டாம் என தோமர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 5-வது நாளாக டிசம்பர் 5 ஆம் தேதி அதாவது நாளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தலைமையில் மீண்டும் விவசாயிகளுடன் உரையாடல் நடைபெற உள்ளது. இந்த உரையாடலிலும் இன்று கலந்துகொண்ட 40 உழவர்கள் உட்பட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025