மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை இன்று ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
அதாவது, சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, நான் அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன் எனக் கூறியதாக கூறப்படுகிறது. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். இது அவமானமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக கூறி, சிவசேனா கட்சி தொண்டர்கள் ஏற்கனவே போராட்டம், வன்முறையில் ஈடுபட்டியிருந்தனர். மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அலுவலங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனிடைய, அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா கட்சி நிர்வாகிகள் நாசிக் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று மத்திய அமைச்சரை அவதூறு பேச்சு தொடர்பாக கைது செய்தனர். இந்த நிலையில், நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது.
அந்தவகையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஜியை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு சட்டங்களை மீறிய செயலாகும். இதுபோன்று நடவடிக்கையால் நாங்கள் பயப்படமாட்டோம். ஆசீர்வாத யாத்திரையில் பாஜகவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. நாங்கள் ஜனநாயக முறையில் தொடர்ந்து போராடுவோம், பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…