மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கற்கள், கட்டைகளால் கிராம மக்கள் கடும் தாக்குதல்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் கற்கள், கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் அருகே பஞ்ச்குடி கிராமத்துக்கு ஆய்விற்காக சென்ற மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கிராமத்துக்கு வந்த அமைச்சரின் கார் மீது பொதுமக்கள் கற்கள் வீசியும், கட்டை கம்புகளால் தாக்கியும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பாதுகாப்பு வாகனங்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்ததை அடுத்து தனது பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார்.
இந்த தாக்குதலுக்கு ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு கடுமையான வன்முறை நிகழ்ந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பல பகுதிகளில் ஏற்பட்டுயிருந்தது.
இதில் 14க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறி, நேற்று நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பித்தக்கது.
#WATCH Union Minister V Muraleedharan’s car attacked by locals in Panchkhudi, West Midnapore#WestBengal
(Video source: V Muraleedharan) pic.twitter.com/oODtHWimAW
— ANI (@ANI) May 6, 2021