Central minister Mansuk mandaviya [Image source : PTI]
வீராங்கனைகள் போராட்டத்தை அரசியலாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து, அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணி, பதக்கங்களை கங்கை ஆற்றில் விடுவது என பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது நாடெங்கிலும் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.
சரண் சிங் மீது பாலியல் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவிய, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை கோரும் உரிமை உண்டு. மல்யுத்த வீரர்கள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர், அது செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தன் வேலையை செய்யட்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து பேசினார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…