பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு…!அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்…!

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
பின்னர் பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்தார்.முதற்கட்டமாக பாலியல் புகார் பற்றி விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பினார். கட்சிகளின் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுவதால் உயர்மட்ட விசாரணைக்குழு அவசியம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024