Union Minister JP Nadda [File Image]
டெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று துவங்கியது. திங்கள், செவ்வாய் என இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் NDA வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யபட்டார்.
இதனை அடுத்து, இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. குடியரசு தலைவர் உரை முடிந்த உடன் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது மாநிலங்களவையின் புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தேசிய பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டார். மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருக்கிறார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…