எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பற்றி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அதில்,எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.