ராகுல்காந்தியின் 6 மாத சாதனைகள்.. பட்டியலிட்ட மத்திய அமைச்சர்..
நேற்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகள் பட்டியலிட்டு உள்ளார்.
பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்.
மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது.
ஏப்ரல்-மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.
மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம்.
ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி
ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என ராகுல் காந்தி விமர்சித்தார்.
இதையடுத்து, மத்திய தகவல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ராகுல் காந்தி தினமும் டுவிட் செய்து வருகிறார். டுவிட்களை மட்டுமே வெளியிடும் அளவிற்கு காங்கிரஸ் சுருங்கி விடும் என நான் நினைக்கிறேன். ராகுல் காந்தியின் கடந்த 6 மாத கால சாதனைகளை நான் கூறுகிறேன் பட்டியல் போட்டுள்ளர்.
Rahul Baba note India’s achievements in “war against #Corona“.India has the least average cases, active cases and death rate than the US, Europe and Brazil. By making fun of candle lights, @RahulGandhi ji you have insulted the people of India & brave Corona warriors.@BJP4India
— Prakash Javadekar (@PrakashJavdekar) July 21, 2020
பிப்ரவரி- ஷாகீன்பாக் , பிற கலவரங்கள்.
மார்ச்-சிந்தியா, மத்திய பிரதேச அரசு கைவிட்டு போனது.
ஏப்ரலில்- தொழிலாளர்களை தூண்டி விட்டது.
மே- தேர்தலில் வரலாற்று தோல்வி கண்டதன் 6-வது ஆண்டு தினம்.
ஜூன்- சீனாவுக்கு ஆதரவாக பேசியது.
ஜூலை-ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அழிந்தது என ஜவடேகர் பட்டியலிட்டார்.
அமெரிக்கா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் உள்ளது. மெழுகுவர்த்தி விளக்குகளை கேலி செய்வதன் மூலம், ராகுல்காந்தி ஜி நீங்கள் இந்திய மக்களையும், துணிச்சலான கொரோனா வீரர்களையும் அவமதித்தீர்கள் என்று அமைச்சர் கூறினார்.