மாட்டு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பெயிண்ட் ! இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் கட்கரி

காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான பெயிண்ட் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிமுகப்படுத்துகிறார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, விஷத் தன்மையற்ற வகையில் “காதி இயற்கை வர்ணம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெயிண்ட் , பூஞ்சைக்கும், நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் பெயிண்ட் ஆகும்.பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட் குறைந்த விலையில் இருப்பதுடன் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது. காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன- டிஸ்டம்பர் வர்ணம், நெகிழி எமல்ஷன் வர்ணம்.காதி இயற்கை எமல்ஷன் பெயிண்ட் இந்திய தர நிர்ணய அமைப்பின் 15489:2013 சான்றையும், காதி இயற்கை டிஸ்டம்பர் பெயிண்ட் இந்திய தர நிர்ணய அமைப்பின் 428:2013 சான்றையும் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025