அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆட்டோவிற்கான நம்பர் 1 உற்பத்தி மையமாக மாறப்போகிறது” என்று கூறினார்.
ஏற்கனவே இது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கூறுகையில்,அடுத்த ஆண்டு நிச்சயமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான அறிக்கைகளின் படி,இந்தியாவுக்கு வரும் டெஸ்லாவின் முதல் மாடல் மிகவும் மலிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .உலகின் பிற பகுதிகளைப் போலவே டெஸ்லாவும் இந்தியாவின் விற்பனையை நேரடியாகக் கையாள உள்ளது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…