மைக்ரோசாப்ட் பாதிப்பு.. மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

Union minister Ashwini vaishnaw tweet about Microsoft Windows Issue

டெல்லி: உலகளாவிய மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் தேசிய தகவல் மையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் இயங்கு தளமானது சில மணி நேரங்களுக்கு முன்னர் பாதிப்பை சந்தித்தது. இதனால் ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

மைக்ரோசாப்ட் பாதிப்பு காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து அங்குள்ள உதவி மையத்தை நேரடியாக தொடர்புகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், விமானம் எப்போது புறப்படும் என்ற விவரங்கள், போர்டிங் பாஸ் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் விமான ஊழியர்களால் கைப்பட எழுதி தரும் நிலை பல்வேறு இடங்களில் நிலவுகிறது.

இந்த இக்கட்டான சூழல் குறித்து மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில பதிவிடுகையில், இந்த பாதிப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு சிக்கலை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. CERT தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதனால் மத்திய அரசின் NIC சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

NIC (National Informatic Center) என்பது தேசிய தகவல் மையமாகும். இது மத்திய அரசின் தொழில்நுட்ப சேவைக்காக 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தான் மத்திய மாநில அரசு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் தீர்க்கப்படுகின்றன

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்