2 கோடி ரூபாய் ஓவியம்.! பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர்.!

Default Image

யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூரிடம் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேர ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். 

மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று பேசுகையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பற்றி தனது குற்றசாட்டை முன்வைத்தார். அவர் கூறுகையில், அண்மையில் பன்னாட்டு சட்டவிரோத பணபரிவர்தனைகளை கண்டறியும், FATF எனும் அமைப்பானது ஓர் தகவலை வெளியிட்டதாகவும்,

ஓவியங்கள் ஏலம் : 

அதில், கலை ஓவியங்கள் ஏலத்தில் முறைகேடு நடந்து பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும், அதில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.

2 கோடிரூபாய் ஓவியம் :

மேலும், யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூரிடம் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேர ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் எனவும், ராணா கபூரை 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓவியம் வாங்க வற்புறுத்தியது யார் என்றும், பிரியங்கா காந்தியிடம் அனுராக் தாக்கூர் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். மேலும், இது போல எத்தனை ஓவியங்கள் விற்று பணம் திரட்டப்பட்டது? என்றும்  தாக்கூர் கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்