3 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா …!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே 5-ஆம் தேதி இரவு அமித்ஷா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என கூறப்படுகிறது.
மே 5-ஆம் தேதி இரவு கொல்கத்தா சென்றடையும் அமித்ஷா முதலில் வடக்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள ஹிங்கல்கஞ்ச் பகுதிக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.