2024க்கு பின்னர் பீகார் அரசு தானாக கவிழ்ந்து விடும்.! மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்.!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பீகாரில் நிதிஷ்குமார் அரசு தானாக கவிழ்ந்து விடும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பீகாரில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக உள்ளார். பாஜக 74 எம்எல்ஏக்களுடன் பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறது.
ஆட்சி கவிழும் :
நேற்று பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதில், பேசிய அவர் 2024க்கு பின்னர் நிதிஷ்குமார் ஆட்சி கவிழும் என கூறினார்.
கூட்டணியில் இடமில்லை :
அவர் மேலும் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு பீஹார் மாநிலத்தில் நிதிஷ்குமார் ஆட்சி கவிழும். பாஜக பீகாரில் ஆட்சி அமைக்கும். என்றும், ஜனதா தள கட்சிகளுக்கு இனி கூட்டணியில் இடமில்லை என்று குறிப்பிட்டு பேசினார்.