தெலுங்கானாவில் 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள் இருக்கின்றன… அமித்ஷா விமர்சனம்.!

Union minister Amit shah

தெலுங்கானா மாநிலம் 3வது முறையாக சட்டப்பேரவை தேர்தலை வரும் நவம்பர் 30ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பாஜக கடந்த முறை ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்று இருந்தது.

தெலுங்கானாவில் பிஆர்எஸ் , காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி என கூறினாலும், உண்மையில் பிஆர்எஸ் – காங்கிரஸ் கட்சியிடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக குறிப்பிடதக்க அளவில் வெற்றியை பெற கடுமையாக போராடி வருகிறது. இந்த வெற்றியானது வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிதும் உதவும் என தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

5 மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்..!

 மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷா, தெலுங்கானாவில் ஜங்கானில்நடைபெற்ற பேரணியில் பிரச்சார உரையாற்றினார்.எ அவர் பேசுகையில், பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் AIMIM ஆகிய காட்சிகளை அவர்களின் தலைமுறைகளை குறிப்பிடும் வகையில், 2ஜி , 3ஜி, 4ஜி என விமர்சனம் செய்தார்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் 2 ஜி என்றும், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகன் கேடி.ராமராவ் ஆகியோர் 2 தலைமுறைகளாக அரசியல் செய்வதகவும், 3ஜி என்றால் மூன்று தலைமுறை கட்சியான அசாதுதீன் ஒவைசியின் AIMIM தான் என்று விமர்சித்தார்.

அடுத்து 4ஜி என்றால் நான்கு தலைமுறைகள் கொண்ட கட்சி காங்கிரஸ். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி என நான்கு தலைமுறைகளைக் கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி என்றும் அமித்ஷா விமர்சித்து இருந்தார்.

மேலும் கூறுகையில், “ஜங்கானில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.  ஆனால் அது தற்போது வரையில் நிறைவேற்றப்படவில்லை. ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் நில அபகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓவைசிக்கு பயந்து தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாட தெலுங்கானா மறுத்துவிட்டார். தெலுங்கானாவை ஊழலின் மையமாக சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். மாநிலம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளது.

 “வரும் தேர்தலில் உங்கள் ஒரு ஓட்டு தெலுங்கானா மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தெலுங்கானா உருவானபோது முன்னேறிய மாநிலமாக இருந்தது, ஆனால் இன்று அதிகமான கடனில் உள்ள மாநிலமாக மாறிவிட்டார் கேசிஆர் என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் ஆட்சியை கடுமையாக சாடினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai