விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.! மத்திய அரசு உத்தரவு.!
சென்னை : தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பு கடந்த மே 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகும், அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை இந்திய அரசு தடை செய்துள்ளது. அதன் தடையை தற்போது வரையில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழீழம் விடுதலை புலிகள் அமைப்பு 2009, மே மாதம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது வரையில் பல்வேறு நாடுகளில் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதனால் அந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2019 முதல் 2024 வரையில் இந்த தடை இருந்த நிலையில், தற்போது கூடுதல் 5 ஆண்டுகள் என 2029 வரையில் விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.