மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு வரும் 17ம் தேதி செல்ல இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே.வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் பணிகள் இப்போதே துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தில் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிக்குரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது சிலிகுரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 19ம் தேதி சிலிக்குரிக்கு சென்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன. அமித் ஷா துர்கா பூஜை முடிந்த பின் மேற்கு வங்கத்துக்கு செல்வார் என்றும் பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…