நிவர் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் .
வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிவர் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் கேட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.மேலும் நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…