பீகார் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறுகிறது .பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது .எனவே அங்குள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…