மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடனான கூட்டதிற்கு தாமதமாக வந்ததற்கு அமித் ஷா கண்டனம்…
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. மேலும் புயல் கரையைக் கடந்த போது 130 கி.மீ க்கு மேல் பலத்த சூராவழிக்காற்று வீசியது, மேலும் யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் லட்சக்கணக்கில் மக்களின் வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளது, மேலும் 1 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1000 கோடி நிவாரணப் பணிக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ததையடுத்து பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் 3:30 மணி கலைகுண்டாவில் திட்டமிடப்பட்டது.
அந்த சந்திப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார் முதல்வர் மம்தா, இந்த செயலைக் கண்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். அதில், மேற்கு வங்க முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் செய்தது சிறிய நடத்தை, அது “பொது நலனுக்கு மேலாக ஆணவத்தை” காட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் யாஸ் புயல் குடிமக்களை பெரிதும் பாதித்துள்ளது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது காலத்தின் தேவை” என்று ஷா ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…