உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை.
ரஷ்யா – உக்ரைன் இடையே இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து நேற்று வந்த 2 விமானங்களில் மொத்தம் 469 இந்தியர்கள் மீட்க்கப்பட்டனர்.
மேலும், உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்டுக்கொண்டு 4-ஆவது ஏர் இந்தியா விமானம் தற்போது டெல்லி வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கோரி மால்டோவா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…