உலகில் வாங்கப்படும் எந்தஒரு காரிலும் ஒரு இந்திய பாகமாவது இருக்கும்.! நிர்மலா சீதாராமன் பெருமிதம்.!
உலகில் எந்த ஒரு நாட்டில் வாங்கப்படும் எந்தவொரு புதிய காரிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பாகமாவது பொருத்தப்பட்டு இருக்கும். – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பிரதேஷ மாநில த்தில் இந்தூரில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்திய பொறியாளர்கள் பற்றி பெருமையாக பேசினார்.
அவர் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகளாவிய கார் உற்பத்தியாளர்களுக்காக ஓட்டுநர் இல்லாத காரை உருவாக்க தேவையான 100 மில்லியன் குறியீட்டுகளில் 35% குறியீட்டை இந்திய பொறியாளர்கள் தான் உருவாக்குகிறார்கள். என குறிப்பிட்டார்.
மேலும், பேசிய அவர், ‘ உலகில் எந்த ஒரு நாட்டில் வாங்கப்படும் எந்தவொரு புதிய காரிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பாகமாவது பொருத்தப்பட்டு இருக்கும். என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.