#BUDGET2022:பொருளாதார ஆய்வறிக்கை – மக்களவையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
டெல்லி:நாடாளுமன்ற மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.
குறிப்பாக,குடியரசு தலைவர் உரையின்போது கல்வி தொடர்பான பேசியபோது திருக்குறளை மேற்கோள்காட்டினார்.அதாவது, நாடாளுமன்ற கூட்டு கூட்டத் தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருவள்ளுவர் பெயரை குறிப்பிட்டு அவர் எழுதிய ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை குறிப்பிட்டார்.நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும் பொழுது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
இதற்கிடையில்,நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்
இந்நிலையில்,மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துநாடாளுமன்ற மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.மேலும்,ஆய்வறிக்கை குறித்த தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Finance Minister Nirmala Sitharaman tables the Economic Survey 2021-22 along with Statistical Appendix in the Lok Sabha.#BudgetSession2022 pic.twitter.com/9p2nos5bRz
— ANI (@ANI) January 31, 2022