“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாததன் காரணம் இது தான்”- அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

Default Image

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாததன் காரணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா எனப் பெரும்பாலான மாநிலங்களில் வரை பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக,கடந்த மே 4-ம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை 38 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

.இதனால், நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இதனால்,பெட்ரோல் டீசல் மீதான விலை எப்போது குறைக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடைய எழுந்துள்ளது.

இந்நிலையில்,பெட்ரோல் & டீசலின் விலையை குறைக்க முடியாததன் காரணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.1.44 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் நிறுவன பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையை குறைத்தது.அதுபோன்ற தந்திரத்தை எங்களால் செய்ய முடியவில்லை. இதனால், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக, எங்கள் அரசுக்கு சுமை வந்துவிட்டது, அதனால்தான் பெட்ரோல் மற்றும்  டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை.

எரிபொருள் மீதான கலால் வரியில் இப்போதைக்கு எந்தக் குறைப்பும் இல்லை.ஏனெனில்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி(UPA) அரசாங்கத்தால், எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் கஜானாவுக்கு சுமை ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,195.72 கோடிக்கு மேல் எண்ணெய் பத்திரங்களுக்கு மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது.

2026 க்குள் நாங்கள் இன்னும் 37,000 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். வட்டி செலுத்திய போதிலும், முதன்மை நிலுவையில் உள்ள 1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. எண்ணெய் பத்திரங்களின் சுமை என்னிடம் இல்லையென்றால், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கும் நிலையில் நான் இருந்திருப்பேன்”,என்று தெரிவித்தார்.

மேலும்,புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள கோளாறுகள் அடுத்த 2-3 நாட்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong
Women In Space 2025