#Breaking:கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கட்டமைப்புக்கு ரூ. 1.1 லட்சம் கோடி வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கட்டமைப்புக்கு ரூ.1.1 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,”கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கட்டமைப்புக்கு ரூ.1.1 லட்சம் கோடி வழங்கப்படும். அதன்படி,சுகாதாரத்துறை உள்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியும்,இதர துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். மேலும்,மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்புக்கு ரூ.100 கோடி வழங்கப்படும்.
7.95 % வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும்.பிற துறைகளுக்கான கடன் வட்டி விகிதம் 8.25 % ஆக இருக்கும்.
அவசர கால கடன் வசதியாக தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும். “,என்று அறிவித்துள்ளார்.