இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் ! முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்பு
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாளையுடன் இந்த ஊரடங்கு முடிய இருந்த நிலையில் ,நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த அமைச்சரவை கூட்டத்தில், நிதித்துறை, பொதுத்துறை போன்ற முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.