பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.