டெல்லியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
மேலும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இதனியையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், புதிய வகை வைரஸ் இந்தியாவில் இதுவரை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…