இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்…!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரசின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025