இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு, டெல்லியில் 165, கேரளாவில் 57, தெலுங்கானாவில் 55, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 49 மற்றும் 46 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் ஆண்டில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த வியாழன் அன்று பிரதமர் மோடி, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் போது, புதிய வகைகளை மனதில் வைத்து நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மேலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், கொரோனா விதிகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டில் கொரோனா பாதித்த பகுதிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து அங்கு பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.