பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்;3 வேளாண் சட்டம் ரத்துக்கு ஒப்புதல்?.!
பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக,கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதல் அவசியம் என்பது கட்டாயம்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில்,3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.