#Breaking: நிறைவடைந்தது மத்திய அமைச்சரவை கூட்டம்.. கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?

Default Image

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பிரதமர் மோடி, இன்று மத்திய அமைச்சர்களுடன் அவசரகால ஆலோசனை நடத்தினார். தற்போது அந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதன்காரணமாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் அவசரகால ஆலோசனை நடத்தினார். காணொளி காட்சி வாயிலாக நடந்து முடிந்த இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் இன்று 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பது தொடர்பாகவும், தடுப்பூசிகள் போடும் பணிகள் குறித்தும் முழுமையாக ஆலோசிக்கப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் வாயிலாக தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டும் எனவும், தடுப்பூசி போடும் கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதுமட்டுமின்றி, நாளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் கட்டுப்பாடுகள் தொடர்பான முக்கியமான உத்தரவினை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்