மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றமா? மாநில பாஜக தலைவர்கள் நியமனம்… ஜேபி நட்டா உத்தரவு.!

BJP JPNadda change

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிவரும் பாஜக, மாநில பாஜக தலைவர்களை நியமனம் செய்து கட்சியின் வலிமையை மேலும் அதிகரித்து வருகிறது. இதன்படி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெலுங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷ ரெட்டியை நியமித்துள்ளார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும், ஜார்கண்ட் மாநில எதிர்கட்சித்தலைவராக இருக்கும் பாபுலால் மராண்டி அம்மாநில பாஜக தலைவராகவும், ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்யப்பட்டு ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாஜகவின் இந்த நடவடிக்கைகளால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பஞ்சாப் மாநிலத்திற்கு பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்