செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நாட்டில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தி சூழலை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கார்களுக்கான செமிகண்டக்டர் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோன்று பாசன திட்டங்களுக்கு ரூ.93,068 கோடியில் மாநில அரசுகளுக்கு ரூ.37,454 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு திட்டம் 2021-26 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனாவை செயல்படுத்துவதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் எஸ்சி மற்றும் 2 லட்சம் எஸ்டி விவசாயிகள் உட்பட சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என கூறினார்.