10 பொதுத்துறை வங்கிகள் இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு போன்ற உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக வெளியானது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 10 பொதுத் துறை வங்கிகள் இணைத்து 4 வங்கிகளாக இயங்கும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.