நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் – பிரதமர் தலைமையில் ஆலோசனை..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
நாடாளுமன்றத்தில் நேற்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி மற்றும் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பதில் மற்றும் விளக்கம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.