பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தான் மத்திய பட்ஜெட், தேர்தலுக்காக அல்ல என்று மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக அல்ல என்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் வந்துகொண்டுதான் இருக்கும், ஆனால் நாட்டு மக்களின் பொருளாதார நிலையை எப்படி மேம்படுத்துவது என்பதில் தான் பிரதமரின் கவனம் எப்போதும் இருக்கிறது, அதை நீங்கள் இந்த பட்ஜெட்டிலும் பார்க்கலாம் என சௌத்ரி கூறினார்.
நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த மக்களவைத் தேர்தலுடன் மோடியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது, இதனால் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பட்ஜெட்2023 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் மொத்த பணவீக்கம் 6.8% வரை இருக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படி கூறப்படுகிறது.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…