மத்திய பட்ஜெட் 2024 ஆரம்பம்… முக்கிய அறிவிப்புகள் இதோ…

Union Budget 2024

மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளர். அதற்காக நேற்று (ஜூலை 22)இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஏற்கனவே 5 முறை முழு பட்ஜெட் ஒருமுறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ச்சியாக 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்க்கு முன்னர், இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னரே தற்போது பட்ஜெட் உரையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும், நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அறிவிப்புகள் :

  • விண்வெளி சார்ந்த  திட்டங்களுக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • பிளாட்டினத்திற்கான சுங்க வரி 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி ரத்து ரத்து செய்யப்படுகிறது.
  • செல்போன் மற்றும் சார்ஜர் போன்ற சாதனங்களுக்கு சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • அணுசக்தி துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்ய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
  • 1 கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஜிஎஸ்டி வரி பலன்களை அதிகரிக்க, வரிக் கட்டமைப்பானது வரும்காலங்களில் பகுப்பாய்வு செய்யப்படும்.
  • புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து.
  • மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • 1 கோடி நகர்ப்புற ஏழை குடும்பங்களின் வீட்டுவசதிக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பீகாரில் நாளந்தா பல்கலைக்கழகம் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும்.
  • ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
  • நாடு முழுக்க 12 தொழில்பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
  • பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
  • நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ஆந்திர மாநில மூலதன தேவையை உணர்ந்து அம்மாநிலத்திற்கு கூடுதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பீகாரில் புதிய மருத்துவ கலோரி, புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
  • நேபாள நாட்டு நதிகளால் பீகாரில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பீகார் கயா, புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.
  • பீகாரில் புராதன கோயில்களை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
  • உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும்.
  • புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒருமாத ஊதியம் வழங்கப்படும்.
  • புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒருமாத ஊதியம் வழங்கப்படும்.
  • இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4% இலக்கை நோக்கி நகர்கிறது.
  • விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை நிறைவு செய்தார். அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய பட்ஜெட் 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்