மத்திய பட்ஜெட் 2019 :தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்
மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் உரையுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.
மத்திய அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தின் கடைசி கால பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட்டை நாளைய தினம் தாக்கல் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த பட்ஜெட் வெளியீட்டில் தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் உரையுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.