அறிவிக்கப்படாத அவசர நிலை…!இந்தியாவில் கணினிகளில் பதிவாகும் தகவல்களை அனுமதியின்றி எடுக்க மத்திய அரசு முடிவு…!
சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகள் அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்க உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அங்கீகாரத்தால் உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகள் அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும் அதிகாரம் உள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.